சைபர் கிரைம் போலீசார் வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் மோசடி செய்வதை மீட்டுத்தர புதிய ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஏற்படும் பணம் மோசடியைத் தடுப்பதற்காக வங்கிகள் சார்பாக அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த மோசடியை தடுக்க சைபர் கிரைம் போலீசார் உதவி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி வாடிக்கையாளர்களின் வங்கியில் இருந்து முறைகேடாக பணம் எடுக்கப் பட்டதை அறிந்தால் 155260 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த ஹெல்ப் லைன் எண்ணுக்கு பணத்தை இழந்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்தால் இழந்த பணத்தை மீட்டு விடலாம் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.