தமிழகம் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் சீமான் ஒவ்வொரு பகுதியிலும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், “மறுபடியும் நீங்கள் இரட்டை இலை மற்றும் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட்டால் நாசமா போயிடுவீங்க” என்று தெரிவித்துள்ளார்.