காசோலை மோசடிகளை தடுக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை காசோலை மூலம் கொடுக்கின்றனர். ஆனால் அந்த வங்கி கணக்கில் போதிய தொகை இல்லாமல் போவதால் காசோலை மூலமாக பணம் பெற முடியாத சூழல் உருவாகும். மேலும் கொடுக்க வேண்டிய தொகைக்காக வங்கி காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபடுவது அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் சுமார் 35 லட்சம் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளுக்கு தீர்வு காண சிறப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்நிலையில் அந்த சிறப்பு குழு சீர்திருத்தங்கள், தொழில்நுட்பத்தின் பயன்பாடு, வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கான நீதிமன்ற கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் வாயிலாக நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண முடியும் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் சிறப்பு கூட்டம் நடத்த முடிவு செய்தது. அதேபோல் நடைபெற்ற கூட்டத்தில் காசோலை விநியோகிக்கப்படும். மேலும் குறிப்பிட்ட வங்கி கணக்கில் போதிய தொகை இல்லையெனில் அந்த கணக்குடன் தொடர்புடைய மற்றொரு வங்கி கணக்கில் இருந்து காசோலைக்கான தொகையை வழங்குவது, காசோலை மோசடியை வராக கடன் போல கருதி சம்பந்தப்பட்ட கடன் மீட்பு நிறுவனத்திடம் அதை ஒப்படைப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் வங்கிகளிடமிருந்து போதிய தரவுகளை பெற்ற பிறகு இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் காசோலை மோசடி தடுப்பதுடன், தொழில் புரிவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த முடியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.