உலக சுகாதார நிறுவனம் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சில முக்கிய மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா உருமாறி உருமாறி அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் சில முக்கிய மருந்துகளை தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி ஆர்த்ரைட்டிஸ் மூட்டு வலிக்காக பயன்படுத்தப்படும் பாரிசிடினிப் மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் நிலையை குறைப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆன்டிபாடி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் சோட்ரோவிமாப் மருந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.