நாட்டின் ரிசர்வ் வங்கியின் பெயரில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாக கூறி சில மோசடி கும்பல் ஈடுபட்டு வருகின்றன. அவர்களிடம் பொது மக்கள் பெரும்பாலானோர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இந்த கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வழங்குவதாக கூறி அதற்கு பணம் கொடுப்பதாக கூறிய மோசடிக் கும்பல்கள் விளம்பரங்கள் செய்து வருகின்றன.
அதனை நம்பி ஏமாறும் பொதுமக்களிடம் கட்டணம், கமிஷன் மற்றும் வரி என்ற பெயரில் ஒரு தொகையையும் வசூலித்து விடுகிறார்கள். இது பற்றி தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், மோசடி கும்பல்களை நம்பி பொதுமக்கள் யாரும் பணத்தை இழக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு அதற்காக பணம் கொடுப்பதில்லை எனவும், அதற்காக கமிஷன் மற்றும் கட்டணம் என பணம் வசூலிப்பது இல்லை எனவும் ரிசர்வ் வங்கி தெளிவாகக் கூறியுள்ளது. அது மட்டுமல்லாமல் தன் பெயரில் கட்டணம் மற்றும் கமிஷன் வசூலிக்க யாரும் அதிகாரம் வழங்கவில்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.