இந்தியாவின் எதிர்காலத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த காடிசக்தி தேசிய பெருந்திட்டம் தான் தீர்மானிக்கும் என தொழில் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் பிரதம மந்திரி காடிசக்தி தேசிய பெருந்திட்டதின் முதலாம் ஆண்டு நினைவை குறிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் கூறியதாவது. சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் நமது நாட்டில் 1 ஆண்டில் 10 லட்சம் ரூபாய் வரை சேமிக்கப்படுகிறது.
அதற்கு காரணம் இந்த திட்டம் தான். மேலும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான சமூகத்துறையில் இத்திட்டத்தின் உபயோகம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தொழில்நுட்பத்தின் பயனை கொண்டு சென்று சாதாரண மக்களின் வாழ்க்கை தரம் எளிதாக்கப்பட்டுள்ளது. மேலும் வருங்காலத்தில் இந்தியாவின் எதிர்காலத்தை இந்த திட்டம் தான் தீர்மானிக்கும் என அவர் கூறினார்.