பிரான்சில் ஈ.கோலை என்னும் கிருமிகள் நெஸ்ட்லே நிறுவன தயாரிப்பான உறையவைக்கப்பட்ட பீட்ஸாக்களில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈ.கோலை கிருமி தொற்றால் கிட்டத்தட்ட 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த வகை கிருமிகள் ஆயுள் முழுமைக்கும் பிரச்சனையை உருவாக்கக்கூடியதாகவும், மரணத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.
இதுவரை இரண்டு இளைஞர்கள் ஈ.கோலை கிருமி தொற்றிய பீட்ஸாக்களை சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் Fraîch’Up frozen pizzas என்னும் பீட்ஸாக்களை வாங்கியவர்கள் அதனை சாப்பிட வேண்டாம் என்றும், தூர எறிந்துவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.