Categories
உலக செய்திகள்

மக்களே…! இந்த நாட்டுக்கு போனீங்கன்னா “போலீஸ்” பார்வையில்தான் இருக்கணும்…. வெளியான அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவில் நாளொன்றுக்கு
ஓமிக்ரான் பரவல் 3,00,000 யும் கடந்த நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் அந்நாட்டை சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானால் அமெரிக்காவில் நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேலான நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தலை முன்னிட்டு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அமெரிக்காவை பிரான்ஸ் அரசாங்கம் கொரோனா பயண சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

ஆகையினால் அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் வரும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதோடு மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளின் கண்காணிப்பிலும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |