Categories
மாநில செய்திகள்

மக்களே…! இந்த நேரத்தில் பயணத்தை தவிருங்கள்…. அமைச்சரின் பணிவான வேண்டுகோள்…!!!

மாண்டஸ் புயல் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் அறிவுறுத்தலின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வழக்கம் போல பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தங்களின் பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புயல் கரையை கடக்கும் தருணத்தில் பொதுமக்கள் பேருந்து பயணத்தின் முற்றிலும் தவிர்க்கும் படியும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |