2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் முடிவுக்கு வரும்போது சில முக்கிய வேலைகளை முடிக்க வேண்டிய அவசியம் இருக்கும். அந்த வகையில் நீங்கள் உடனடியாக முடிக்க வேண்டிய நான்கு முக்கிய பணிகளை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
PF கணக்கு:
உங்களிடம் பிஎஃப் கணக்கு இருந்தால், கட்டாயம் இந்த வேலையை உடனடியாக முடித்து விடுங்கள். பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களது அக்கவுண்டுக்கு நாமினியை நியமிக்கவேண்டும். அதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல்:
2021 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி தான் கடைசி நாள். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்போது டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலகட்டத்தை கருத்தில் கொண்டு இந்த நிவாரணம் வழங்க பட்டுள்ளது.
வாழ்வு சான்றிதழ்:
பென்ஷன் வாங்குவோர் அனைவரும் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியம். அதன்படி நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், ஆயுள் சான்றிதழ் என்பது ஒரு பென்ஷனர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று. இருந்தாலும் இந்த ஆண்டுக்கு ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பென்ஷன் வாங்குபவர்கள் அனைவரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
PF- ஆதார் கார்டு இணைப்பு:
பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் UAN நெம்பர் உடன் உடனடியாக ஆதார் எண்ணை இணைப்பது நல்லது. இல்லையென்றால் உங்களின் பிஎஃப் பணம் வருவதில் சிக்கல் நேரிடலாம்.எனவே இந்த மாதம் இறுதிக்குள் இந்த நான்கு வேலைகளையும் விரைந்து முடித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.