நாடு முழுவதும் வங்கிகளுக்கு இந்த மாதம் 17 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் வங்கி விடுமுறை நாட்கள் வேறுபடும். நவம்பர் மாதம் திருவிழாக்களின் மாதமாக கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் நவம்பர் மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதனால் வங்கி தொடர்பான பணிகளை சரியான நேரத்தில் திட்டமிட்டு முடித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சில மாநிலங்களில் மட்டும் சில நாட்கள் வங்கிகள் மூடப் படும், ஆனால் மற்ற மாநிலங்களில் அனைத்து வங்கிகளும் வழக்கம் போல் தொடரும். நவம்பர் மாதத்தில் 1, 3, 4, 5, 6, 10, 11, 12, 19, 23 ஆகிய தேதிகளில் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது. இதனை தவிர மாதத்தில் நான்கு நாயிற்று கிலமை கள் மற்றும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படும். அதனால் மொத்தம் 17 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. எனவே உங்களது வங்கி தொடர்பான பணிகளை விரைந்து முடித்து கொள்வது நல்லது.