ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தாலோ அல்லது பசை போட்டு ஒட்டப்பட்டு இருந்தாலும் அது செல்லாது என்பது நமக்கு தெரியும். ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி சில அளவுகோலின் படி ரூபாய் நோட்டுகளை தகுதியற்றவை என்று கூறியுள்ளது. அதன்படி ரூபாய் நோட்டுகள் முழுவதுமாக அல்லது சில இடங்களில் அழுக்காக கிளிவது போன்று இருந்தால் அது செல்லாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் நோட்டின் நிறம் மஞ்சளாவது, அதிகப்படியான மடிப்பு, அழுக்கு ஒரு சதுர சென்டிமீட்டருக்கு மேல் மடங்கி சேதமடைந்து இருந்தால் செல்லாது. 8 சதுர மீட்டருக்கு மேல் துளை இருந்தால் செல்லாது. விளிம்புகள் கிழிந்து காணப்படுவது, கரைகள், எண் எழுத்துக்களை மாற்றும் வகையில் கிறுக்கி வைத்தல், நிறம் மாற்றம், கசங்கிய மடிந்த நோட்டுகள், காகிதம் பசை பயன்படுத்தி ஒட்டி இருந்தல் போன்றவை இருந்தால் அது செல்லாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே மக்களை இனி கடையில் இருந்தோ அல்லது வேறு எங்கேயாவது இருந்து நீங்கள் நோட்டுகளை வாங்குவதாக இருந்தால் இதை எல்லாம் பார்த்து வாங்குங்கள்.