இங்கிலாந்தில் இந்த வாரம் ரத்தம் மழை பொழியும் என்றும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்வது உடன் இடி மின்னலுடன் கன மழை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ரத்த மழை என்பது அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும் போது உருவாக்குவதாகும்.
அதனால் மழை பெய்யும் போது சிவப்பு நிறத்தில் நீர் துளிகள் விழுவதை நம்மால் காண முடியும். இது போன்ற நிகழ்வு இந்தியாவிலும் நடைபெற்றிருக்கிறது. அதாவது கடந்த 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரள மாநிலத்தில் இந்த சிவப்பு மழை பெய்தது. இந்த மழை ஆபத்தானதாக தோன்றினாலும் இந்த நிகழ்வுக்கு பின்னால் ஒரு அறிவியல் விளக்கம் உள்ளது. அதாவதுஅதாவது, ட்ரென்டெபோலியா அனுலாட்டா எனப்படும் நிலப்பரப்பு ஆல்காவிலிருந்து காற்றில் பரவும் உத்திகளால் கேரளாவில் சிவப்பு மழை பெய்ததாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.