தீபாவளி கொண்டாடுவதற்கான விதிமுறைகளை அரசு கூறியுள்ளது
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பட்டாசு விபத்து இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என அரசு கூறியுள்ளது. மேலும் இதற்கான விதிமுறைகளையும் கூறியுள்ளது.
1. குறைந்த ஒலி மற்றும் காற்று மாசுபடுத்தும் தன்மை இல்லாத பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும்.
2. மேலும் திறந்தவெளியில் கூட்டமாக பட்டாசு வெடிப்பதற்கு தாங்கள் வசிக்கும் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
3. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை பொதுமக்கள் வெடிக்க கூடாது.
4. மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
5. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களின் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
6. சுற்றுச்சூழலுக்கு அதிகம் மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.