Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இந்த APPகளில் சிக்கிடாதீங்க உஷார்….. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு…!!!

கடன் வாங்கியவர்களை தற்கொலைக்கு தூண்டும் சட்டவிரோத ஆன்லைன் கடன் செயலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் வாயிலாக அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆன்லைன் வாயிலாக கடன் அளிக்கும் சட்டவிரோத கடன் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவர்கள், நடுத்தர மக்களை குறி வைத்து, அதிக வட்டிக்கு கடன்கள் கொடுக்கின்றனர். கடன் கட்ட தவறினால், மிகவும் மோசமாக மிரட்டுவதால், தற்கொலைகள் ஏற்படுகிறது. இந்த கடன் செயலிகள் எதுவும் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இதுபோன்ற செயலிகள் மீது மாநிலர அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |