கனரா வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனைக்கான வரம்புகளை உயர்த்தியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “கிளாசிக் டெபிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனை 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்வைப்பிங் மெஷின் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாயாகவும் , contactiess NFC பரிவர்த்தனையின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், ஏடிஎம் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது
இவை அனைத்தும் உள்நாட்டு பரிவர்த்தனைக்கு பொருந்தும். ரிசர்வ் வங்கியில் விதிமுறைகளின் படி புதிதாக வழங்கப்படும் அனைத்து ஏடிஎம் கார்டுகளிலும் உள்நாட்டு பரிவர்த்தனை மட்டுமே செல்லுபடியாகும் . எனவே புதிய டெபிட் கார்டு வாங்கிய வாடிக்கையாளர்கள் தனது தேவைக்கேற்ப சர்வதேச பரிவர்த்தனைக்கான வசதியை செயல்படுத்திக் கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.