Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இனி இந்த வங்கி இயங்காது…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!!

போதிய மூலதனம் இல்லாத காரணத்தினால் வங்கி உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் sarjeraodada Naik ShiralaSahakari Bank வங்கியின் உரிமத்தை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சங்கி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் Sarjeraodada Naik Shirala Sahakari வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி உடனடியாக  ரத்து செய்துள்ளது.

இதன் காரணமாக  வங்கியின் முழு செயல்பாடுகளும் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு உரிய பணத்தைக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்படி டெபாசிட் மற்றும் கடன் உதவியின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும். வங்கி சமர்ப்பித்துள்ள தகவல்படி 99 சதவிகிதம் வாடிக்கையாளர்களுக்கு முழு தொகையும் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் இரத்த வங்கியின் உத்தரவில் Sarjeraodada Naik Shirala Sahakari வங்கியிடம் போதிய மூலதனம் இல்லை எனவும்  லட்சம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Sarjeraodada Naik Shirala Sahakari வங்கி தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் பொதுநலன் கடுமையாக பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |