மாநிலத்தில் மின் கட்டண உயர்வு அமலான நிலையில் 2,000க்கு அதிகமான பரிவர்த்தனையை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி, வசூல் மையத்தில் ரூ ரூ.2,000 வரையிலான கட்டணத்தை செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக செலுத்த முடியாது. ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த புதிய நடைமுறை மூலம் 19ஆம் தேதி முதல் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் இது குறித்து மின் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.