Categories
மாநில செய்திகள்

மக்களே!!… இனி இலவசமாகவே காசி, அயோத்திக்கு செல்லலாம்…. சென்னை ஐஐடி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது சென்னை ஐஐடி மற்றும் பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து மத்திய அரசின் காசி தமிழ் சங்கம் என்ற முயற்சிக்கு அறிவு சார் ஒத்துழைப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள அழகான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளி கொண்டு வருவது  இதன் நோக்கமாகும். மேலும் காசி தமிழ் சங்கமம்  நிகழ்ச்சி வருகின்ற நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெறும்.

இதனால் தமிழகத்தில் பல  இடங்களில் இருந்து கலை,இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்கள் காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை, கோவை,ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து ரயில்களுடன் இணைக்கப்பட்ட சிறப்பு பெட்டிகள் மூலம் பல்வேறு குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவார்கள். ஒவ்வொருவரும் திரும்பி வர 8 நாட்கள் வரை ஆகும். இந்நிலையில் காசி அயோத்தியா உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவதுடன் கங்கையில் படகு சவாரியும் மேற்கொள்வார்கள். அவர்களுக்காக பயண செலவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |