Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி இலவச ரேஷன் பொருட்கள் கிடையாது?…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!

நாடு முழுவதும் கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஏழை எளிய மக்களுக்காக பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அந்தத் திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ கொண்டைக்கடலை மாதம்தோறும் வழங்கப்பட்டது. அந்தத் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

இந்நிலையில் இந்த திட்டத்தை செப்டம்பர் மாதத்திற்கு மேல் நீடித்தால்,வரிக்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மத்திய அரசின் நிதி நிலை மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நிதியமைச்சகத்தின் செலவின துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தை நீட்டித்தால் மத்திய அரசுக்கு கூடுதலாக 80 கோடி ரூபாய் செலவாகும் என்றும் உணவு மானியம் 3.7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விடும் என்றும் செலவினத்தை புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அண்மையில் உர மானியத்தை மத்திய அரசு உயர்த்தியது . அதுமட்டுமல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. மேலும் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரியை குறைத்து அறிவித்தது. இத்துடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் சேர்ந்து நிதிநிலையை மோசமடைய செய்துள்ளதாக செலவினத்தை கூறுகின்றது. அதன் விளைவாக வருகின்ற செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |