இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் உதவுகிறது. இப்படிப்பட்ட மிக முக்கியமான ஆதார் கார்டு அனைவருக்கும் இருக்க வேண்டும்.ஆனால் குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இதற்கு தீர்வு காண தமிழக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கு வந்து ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
இந்த திட்டத்தின் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தபடியே ஆதார் எடுத்துக் கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டம் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். பதிவு செய்த குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை ஆதார் அதிகாரிகள் வீட்டிற்கு சென்று சேகரிப்பார்கள். மேலும் குழந்தைகளுக்கான இந்த ஆதார் பதிவு அங்கன்வாடி பணியாளர்களை ஆதார் பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்த உதவுவதோடு ஆதார் பதிவு மேலும் பிரபலப்படுத்தும் என்றும் அரசு தெரிவிக்கிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள 434 குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலகங்களில் மொத்தம் 132 ஆதார் கருவிகள் அமைக்கப்படும் என்று திட்டம் தொடங்கப்பட்ட போது அரசு தெரிவித்தது. அதன்படி வீட்டு வாசலில் ஆதார் பதிவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.