Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி ஊழல் புகார் தெரிவிக்க உங்க மொபைல் எண் அவசியம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் லஞ்சம் புகார் தெரிவிப்போர் தங்களின் மொபைல் போன் எண்ணை தெரிவிப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள்,ஊழியர்கள் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் அதிகாரிகள் மீது மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்க முடியும். நிலையில் புகார் தெரிவிக்கும் நடைமுறையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக பொதுமக்கள் www.portal.cvc.gov.in மற்றும் www.cvc.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

புகார் செய்யும் போது தங்களின் மொபைல் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த மொபைல் எண் ரகசியமாக வைக்கப்படும். புகார் பதிவு செய்த அடுத்த சில நிமிடங்களில் அதை உறுதி செய்வதற்கான தகவல் உங்களுக்கு அனுப்பப்படும். புகார் பரிசளிப்பதற்கான காலக்கெடு ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதங்களாக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் முகவரிக்கும் கடிதம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |