தமிழகத்தில் மின்சார விநியோகம் சீராகவே இருக்கிறது. ஆகவே மின்தடை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம்கொள்ள தேவையில்லை என கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மத்திய அரசின் மின்தொகுப்புக்கு தமிழ்நாடு அரசு சார்பாக செலுத்தவேண்டிய பாக்கி 70 கோடி மட்டுமே இருக்கிறது. அதுவும் ஓரிரு தினங்களுக்குள் செலுத்தப்படும். மத்திய அரசின் போர்டலில் சரிவர வரவு வைக்கப்படாத காரணத்தால் நிலுவை அதிகமாக காட்டப்படுகிறது என அவர் குற்றம்சாட்டினார். கரூரிலுள்ள திருமாநிலையூரில் புது பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தில் கரூர் மாவட்ட சார்பாக மாபெரும் புத்தககண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியினை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். மொத்தம் 11 தினங்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
கரூர் மாவட்டத்தில் கடவூர் மலைப்பகுதிகளில் அரியவகை உயிரினமான தேவாங்கு அதிகளவில் வாழ்கிறது. ஆகவே பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடவூர் மலைப் பகுதி தேவாங்குகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதை பெருமைபடுத்தும் வகையில் தேவாங்கை கொண்டு நூலன், நூல் எனும் ஓவியம் தீட்டப்பட்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அரவக்குறிச்சி குளித்தலை கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மைய நூலகர்கள், நூலக வாசகர் வட்ட நண்பர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கரூர் புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெறும் நிலையில், 115 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 5000 மாணவ-மாணவிகள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
மாலை நேரங்களில் சாலமன் பாப்பையா, சுகிசிவம், கோபிநாத் ஆகிய பேச்சாளர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் மாணவர்கள் வாங்கும் விலையில் புத்தககண்காட்சி நடைபெறும். அதன்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மத்திய அரசின் மின்தொகுப்புக்கு தமிழ்நாடு அரசு சார்பாக செலுத்தவேண்டிய நிலுவைத்தொகையானது 70 கோடி மட்டுமே இருக்கிறது. அதுவும் ஓரிரு தினங்களுக்குள் செலுத்தப்படும். மத்திய அரசின் போர்டலில் சரிவர வரவுவைக்கப்படாத காரணத்தால் நிலுவை அதிகமாக காட்டப்படுகிறது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் சீரான மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மின்தடை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.