திருநெல்வேலி மாநகராட்சியில் சரவணன் என்பவர் புதிய மேயராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டது. இதையடுத்து இந்த புகார் மனுக்கள் மீதான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள மேயர் சரவணன் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு பல்வேறு பகுதிகளில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 15 நாட்கள் முதல் ஒரு மாதத்திற்குள்ளாக பொதுமக்கள் புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.