Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே இனி கவலை இல்லை…. ஆவணங்களை பதிவு செய்ய மொபைல் இருந்தால் போதும்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

திருமண சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழி மூலம் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை உள்ள தலைமைச் செயலகத்தில் திருமண சான்றிதழை இணைய வழியில் திருத்தம் செய்யும் மற்றும்  ஆவணங்களை பதிவு செய்யும்  தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இதில் அமைச்சர் பி,மூர்த்தி பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வே .இறையன்பு, வணிகவரி மற்றும் பதிப்பு துறை செயலாளர் பா. ஜோதி நிர்மலா சாமி, பதிப்புத் துறை தலைவர் மேப்பில் சிவருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து நமது தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக திருமணம் செய்பவர்கள் திருமண சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பம் செய்வார்கள். அதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு திருமண சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளுக்கு செல்லுபவர்கள் விசா போன்ற பணிகளுக்காக திருமண சான்றிதழில் திருத்தம் செய்ய வேண்டியது உள்ளது. எனவே இனி திருமண சான்றிதழ் வேண்டும் என்றாலோ   திருத்தம் செய்ய வேண்டும் என்றாலோ  மக்கள் WWW.tnreginet.gov.in என்று இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில் அவர்களது சான்றிதழ் பரிசீலிக்கப்பட்டு இணையதளத்தில் வாயிலாகவே சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனால் பொதுமக்கள் பதிவு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பொதுமக்கள் தங்களது ஆவணங்களை தாங்கள் விரும்பும் நாட்களில் பதிவு செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அப்போது டோக்கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மேலே உள்ள இணையதளத்தில் வழியாக டோக்கன்களை பெறலாம். மேலும் அவசர ஆவண பதிவு தேவைப்படும் தருணங்களில் இந்த வசதியை பயன்படுத்தி டோக்கன் பெறலாம். இந்நிலையில் உடனடி டோக்கன் வசதி திட்டம் தமிழகத்தில் அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் 100 பதிவாளர் அலுவலகங்களில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Categories

Tech |