சென்னையில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் இடம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள கடற்கரை சாலையில் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் குடியரசு தின விழா நிகழ்வு நடத்தப்படும் காந்தி சிலை வளாகம் மிகவும் பாரம்பரியமானது. இதனையடுத்து வெண்கலத்தாலான காந்தி சிலையை 1959-ஆம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். இந்நிலையில் மகாத்மா காந்தி சிலை மெட்ரோ ரயில் பணிகளுக்காக தடுப்பு அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதைக்காக காந்தி சிலை வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது. தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டம் எங்கு நடைபெறும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது. இந்நிலையில் காமராஜர் சாலையிலேயே குடியரசு தின விழாவை நடத்தலாம். இதற்காக 2 இடங்களை தேர்வு செய்திருப்பதாக கூறினர். மேலும் உழைப்பாளர் சிலை அல்லது விவேகானந்தர் இல்லம் முன்பாக மேடை அமைத்து குடியரசு தின விழாவை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு 2 இடங்களில் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதி எது என்பது முடிவு எடுக்கப்பட்டு இடம் தேர்வு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.