பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை நீக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சீன நாட்டில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வைரஸ் 228 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பின் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்றால் 500 ரூபாய் அபராதமாக பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் அபராதம் விதிப்பதை திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.