Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி திருமணத்தை பதிவு செய்வது செம ஈசி…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

திருமணத்தை  பதிவு செய்வதற்கு அவர்களின் பெற்றோர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில்  பி ஆர் லாலன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் ஆயிஷா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி  திருமண அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் பெண்ணின் தாய் முஸ்லிம் என்பதால் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் மட்டுமே அவர்களின் திருமணத்தை பதிவு செய்ய முடியும் என்று அதிகாரிகள் திருமணத்தை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இவர்களது மனு இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிவி குன்கிகிருஷ்ணன் கூறியதாவது. திருமண பதிவு விதிகள் பெண்களின் உரிமையை பாதுகாக்க உருவாக்கப்பட்டது.

ஆனால் தம்பதியினரின் பெற்றோர் வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்தை பதிவு செய்யாதது  சரியான காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்நிலையில் ஸ்ரீ நாராயண குரு அய்யன்காளி போன்ற மாபெரும் சீர்திருத்தவாதிகள் வாழ்ந்த மதசார்பின்மை கொள்கையே பரப்பிய மாநிலம் தான் கேரளா. ஆனால் சில சாதி குழுக்கள் இந்த  சீர்திருத்தங்களின் பெயர்களை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இதனையடுத்து மாபெரும் சீர்திருத்தவாதிகள் அனைத்து குடிமக்களுக்கும் மதம், ஜாதி வேறுபாடு இன்றி தலைவர்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு அனைத்து குடிமக்களும் தங்களது சொந்த மதத்தை பின்பற்றவும், அவர்களின் சொந்த சடங்குகள் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளை பின்பற்றும் சுதந்திரம் அளித்திருக்கிறது. திருமணம் நடந்ததா இல்லையா என்பது மட்டுமே தான் முக்கியம் தவிர அவர்களது  பெற்றோர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. மேலும்  மனுதாரரின் திருமணத்தை இரண்டு வாரங்களுக்குள் பதிவு செய்ய  வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |