மத்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தலின் போது வாக்காளர்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க தேவையில்லை என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டில் எங்கிருந்தும் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவோம் என்று மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி இது வெளியாகும். அதன் விளக்கக் காட்சிக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது இடம் பெயர்ந்த மக்களுக்கு பெரும் நிம்மதியை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.