வாட்ஸ் அப்பில் ஒரு வித்தியாசமான டிரிக் உள்ளது.
மக்கள் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல செயலிகள் இருப்பது போலவே whatsapp செயலிலும் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் வாட்ஸ்அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் அடுத்த நாள் அதே நேரம் வரும் பொழுது மறைந்து விடும். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்கள் மட்டுமே அவர்களின் whatsapp பயன்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். இந்நிலையில் தனிப்பட்ட விழாக்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதற்கு பதிலாக தங்களது தொடர்பில் இருப்பவர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்வதற்கு வாட்ஸ் அப் சிறந்தது. அதிலும் ஒரு குறிப்பிட்ட யூசரின் whatsapp ஸ்டேட்டஸை நீங்கள் பார்க்கும் போது அவர்களுக்கு அது தெரியும் யார் தங்களின் ஸ்டேட்டஸ்களை பார்த்திருக்கிறார்கள் என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் ஒருவரின் ஸ்டேட்டஸை அவர்கள் கண்டுபிடிக்காமலேயே பார்க்க உங்களுக்கு ஒரு வழி இருக்கிறது. அது என்னவென்றால் whatsapp செட்டிங்ஸில் ரீட் ஆப்சன் இருக்கும். அது ஒரு குறிப்பிட்ட நபர் உங்கள் செய்தியை படித்ததும் இரண்டு அடி குறிப்புகளை நீல நிறமாக மாற்றி அவர் அந்த செய்தியை படித்து விட்டார் என்பதை தெரியப்படுத்தும். அதனை நீங்கள் ஆப் செய்து வைக்க வேண்டும். மேலும் மற்றவர்கள் நீங்கள் செய்தி படித்திருக்கிறீர்களா இல்லையா என்பதை தெரிவிக்காமல் இருக்க இந்த ஆப்சன் உதவும். இந்த ஆப்சன் மூலம் இன்னொரு நன்மையும் இருக்கிறது. அதாவது ரீட் ஆப்சனை நீங்கள் ஆப் செய்து வைத்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஒருவரின் ஸ்டேட்டஸை பார்த்தாலும் அவர்களுக்கு அதை தெரியப்படுத்தாது. அதில் இருக்கும் ஒரு நெகட்டிவ்வான விஷயம் என்னவென்றால் உங்கள் ஸ்டேட்டஸை யார் பார்த்தார்கள் எந்த தகவலும் உங்களுக்கு காண்பிக்காது என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.