அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57 காசுகள் சரிந்து ரூபாய் 77.41 உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றின் செலவு அதிகரிக்கும். இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக உயர்த்தப்படாமல் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது.
ஏற்கனவே உக்ரைன் ரஷ்யா இடையே நடந்த போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதால் இந்த வாரத்தில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை பயங்கரமாக உயரும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயரும். இதனால் மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.