Categories
உலக செய்திகள்

மக்களே….! “இனி பொது இடங்களுக்கு செல்ல இது கட்டாயம்”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் நேபாளத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உள்ளூர் விமானங்களில் ஏறுவதற்கும், திரையரங்குகள், ஸ்டேடியங்கள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வதற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையை மக்கள் அவசியம் கொண்டு செல்ல வேண்டும் என்று அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில் அந்நாட்டு கொரோனா பேரிடர் மேலாண்மை மையம் வருகின்ற 17-ஆம் தேதி முதல் இந்த முடிவானது நடைமுறைக்கு வரும் என்று தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |