Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி ரேஷன் பொருட்கள்…. வீட்டிற்கே டோர் டெலிவரி – வெளியான சூப்பர் நியூஸ்…!!

இனி ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷன் பொருட்களை மக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று வரிசையில் நின்று வாங்கி வந்து வந்தனர். இதையடுத்து ரேஷன் பொருட்களை கடைக்கு செல்லாமல் மக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் என்று டெல்லி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடியரசு தினவிழாவில் உரையின்போது ரேஷன் பொருட்களை மக்களின் வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்திற்கு மத்திய மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி மற்றும் கோதுமையை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக டோர் டெலிவரி செய்யப்படும். உணவுக் கழகத்தின் கிடங்குகளில் இருக்கும் உணவு தானியங்களை ஏற்றி செல்வது முதல் பயனாளிகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் டெலிவரி செய்வது வரை அனைத்து பணிகளும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |