பொதுவாக ட்ரோன்கள் பல இடங்களில் அவசர மருந்துகளை வழங்குவதையும் வயல்களில் உரங்களை தெளிப்பதையும் பலரும் பார்த்திருப்போம். தற்போது பார்சல்களை வழங்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமேசான் நிறுவனம் சமீபத்தில் கலிபோர்னியாவின் லாக்போர்ட் மற்றும் டெக்ஸாஸின் கல்லூரி நிலையம் ஆகியவற்றில் ட்ரோன் டெலிவரி சேவைகளை அறிமுகப்படுத்தியது.
வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பிறகு ஒரு மணி நேரத்திற்குள் வாடிக்கையாளரின் வீடுகளுக்கு பொருள்களை டெலிவரி செய்யும் நோக்கத்தில் அமேசான் இந்த சேவையை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ட்ரோன் மூலம் அதிகமான மக்கள் விரைவில் பார்சல்களைப் பெற இது வழிவகை செய்யும் என்று அமேசான் ஏர் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.