Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி 5 வருடங்களுக்கு இலவசம்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றால் ஐந்து வருடங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதோடு அவர் தான் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முறியடிக்க பாஜக முயற்சி செய்வதாகவும் அதனால்தான் தேர்தலை தள்ளி வைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியால் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தரமானதாக இருக்கும் என குறிப்பிட்ட அகிலேஷ் யாதவ் தான் ஆட்சி அமைக்கும் 5ஆண்டு காலங்களிலும் உத்திரபிரதேசத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். முன்னதாக அவர் ரேஷன் பொருட்களுடன் மாதம் ஒரு கிலோ நெய் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |