இந்தியாவில் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா போரின் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை இன்னும் ஒரு வாரத்திற்குள் பெற்றோருக்கு ரூ.23 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே கடந்த 120 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி இந்தியாவில் காணப்பட்டது. மேலும் இந்தியாவில் 5 மாநில தேர்தலின் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை உயராமல், அதே நிலையில் இருந்து வந்தது.
இதனை அடுத்து 5 மாநில தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. எனவே நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை எகிறும் அபாயம் உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் ஒரு லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.23 வரை பெட்ரோல், டீசலின் விலையை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.