Categories
மாநில செய்திகள்

மக்களே…. இன்னும் 3 மணி நேரத்திற்கு வீட்டிற்குள் இருங்க…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஏற்கனவே நேற்று மாலை முதல் பெய்துவரும் கனமழையால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், மேலும் மழை நீடிக்கும் என்று அதிர்ச்சி தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே இருப்பது நல்லது.

Categories

Tech |