நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும்.தனியார் மருத்துவமனை மையங்கள் கொரோனா தடுப்பூசி மையத்தின் விலையோடு கூடுதலாக 150 ரூபாய் சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அனைவரும் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன்படி இன்று ( ஜூலை 15ஆம் தேதி) முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.