காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினம்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வபோது சிறப்பு தடுப்பூசி முகாமும் நடத்தப்படுகின்றது. 18 வயதிலிருந்து 60-வது வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில், முதன்மை மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது.
இருந்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவே எட்டியுள்ளது. இதுவரை 2,03,454 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் இருக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் இரண்டாவது தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும், எனவே பொதுமக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.