கோயில் நகரமான மதுரை, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்கள் தொல்லியல் சுவடுகளை சுமக்கும் தொன்மையின் சிகரமாக விளங்குகிறது. இந்த பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கவும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் உலகம் முழுவதும் இன்று பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இந்த உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதான சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இலவசமாக சுற்றி பார்க்க தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.