Categories
மாநில செய்திகள்

மக்களே! இன்று காலை முதல்…. 4 மாவட்டங்களில் பேருந்து சேவை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இன்று காலை  6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த ஊரடங்கு தளர்வில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 50% பயணிகளுடன் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |