Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே! இன்று கோவாக்சின் போட்டுக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் காரணமாக பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் தடுப்பூசி முகாம்கள் கடந்த சில நாட்களாக தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசிகள் முகாம்கள் இயங்காத நிலையில்,  இரண்டு நாட்களுக்கு முன் முகாம்கள் செயல்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னைக்குட்பட்ட பகுதிகளில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |