வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால் தாக்கல் செய்யாதவர்கள் உடனே செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2019 -2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வேகமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்ய ஜனவரி 10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து அபாரதத்துடன் கணக்கை தாக்கல் செய்ய மார்ச் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்று முடியும் நிலையில் தாக்கல் செய்யாதோர் இன்றுக்குள் தாக்கல் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.