Categories
மாநில செய்திகள்

மக்களே….! இன்று தொடங்குகிறது….. தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு….!!!!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நகரங்களில் இருக்கும் பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு படையெடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள்,  தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடுவார்கள். அதற்கு ரயில்களில் செல்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதால், முன்னதாக அக்டோபர் 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) மக்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிடுவார்கள் என்பதால் அக்டோபர் 21ம் தேதி வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அக். 22ம் தேதி டிக்கெட் முன்பதிவு நாளையும், அக்.23-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |