Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… இன்று மதியம் 2 -இரவு 11 மணிவரை இலவசம்… செம அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது படத்தை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வரை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க இருப்பதால் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 கிலோ மீட்டர் தூர பாதை உடைய இந்த வழித்தடம் வட சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையத்துடன் இணைக்கும்.

Categories

Tech |