சென்னையில் மாநகரப் பேருந்துகளில் பயணிக்க இன்று முதல் முதியவர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்க இன்று முதல் முதியவர்கள் டோக்கன் பெறலாம். இதற்கான விண்ணப்பத்தை www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அடையாள அட்டை பெற்றோர், புதிதாக பெற விரும்புபவர்கள் உரிய ஆவணங்களை இணைய தளத்தில் சமர்பித்து டோக்கன்களை பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.