சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் இன்று முதல் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் சேமிப்பு திட்டங்களுக்கு இன்று முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி 4 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாகவும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 4 சதவீதத்திலிருந்து 3.5% ஆகவும், ஓராண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.5 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதம் ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி 7.4 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.