கூகுள் மூலமாக நாம் தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு பாதுகாப்பாக அனைத்தையும் நமக்கு கொடுக்கிறது. இந்நிலையில் ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களில் கால் ரெக்கார்டிங் சேவையை வழங்கி வரும் மூன்றாம் தரப்பு செயலிகளை நீக்க கூகுள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளால் கால் ரெக்கார்டிங் சேவையை வழங்கும் API-க்களை இயக்க அனுமதிக்கப்படமாட்டாது .ஆனால் ஸ்மார்ட் போனில் பில்ட் இன் வாய்ஸ் ரெக்கார்டர் உள்ள பயனர்களால் இந்த அம்சத்தை இயக்க முடியும். மேலும் இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.