Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே.. (இன்று முதல் பிப்ரவரி 22 வரை) மழைக்கு வாய்ப்பு…. எச்சரித்த “சென்னை வானிலை மையம்”…!!

தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணத்தால் இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் பிப்ரவரி 23ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களிலுள்ள ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுபோக சென்னையில் இன்று காலை வேளையில் லேசான பனி மூட்டத்துடன் வானம் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |