Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இன்று(1.06.22) முதல் முக்கிய மாற்றங்கள்…. மொத்த லிஸ்ட் இதோ…!!!!

ஜூன் 1-ஆம் தேதி(இன்று) முதல் சமையல் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பணம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் மாறயிருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தவகையில் தற்போது ஜூன் மாதத்திற்கான சிலிண்டர் விலை ஜூன் 1-ஆம் தேதி(இன்று) நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை அதிரடியாக அதிகரித்த நிலையில் தற்போது இந்த மாதமும் விலையேற்றம் அதிகரிக்கும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

அனைத்து நகைகளும் கட்டாயம் ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் ஜூன் 1 முதல்(இன்று) தங்க நகைகளுக்கு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. 14, 18 மற்றும் 22 ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்யப்படும்.

போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் ஜூன் மாதம் முதல்(இன்று) மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ள நெப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜூன் 1-ஆம் தேதி முதல்(இன்று) வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் உயர்த்தப்பட உள்ளது. 150சிசி மேலுள்ள இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் 15% உயர்கிறது. அதேபோல 1000 சிசி முதல் 1500cc வரை உள்ள கார்களுக்கு பிரீமிய தொகை 6% உயர்கிறது.

எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஜூன் 1-ஆம் தேதி முதல்(இன்று) அமலுக்கு வருகிறது.

ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் உடைய மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு தொகை ஜூன் மாதம் முதல் உயர்த்தப்படுகிறது. அதாவது செமி அர்பன் மற்றும் கிராமப்புறங்களில் குறைந்தபட்ச இருப்பு தொகை 15,000 இலிருந்து 25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |